Close
நவம்பர் 22, 2024 8:45 காலை

தமுஎகச கலை இலக்கிய விருதுகள்(2021) படைப்புகளை அனுப்பி வைக்கலாம்

தமுஎகச

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

தமுஎகச மாநிலத்தலைவர் (பொ)  மதுக்கூர் இராமலிங்கம்,  பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட தகவல்:

2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய தமுஎகச கலை இலக்கிய விருது களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2020, 2021 -ஆம் ஆண்டுகளில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூல்/ குறுந்தகடு இரண்டு பிரதிகள் வரும் 15.4. 2022  ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)
மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669 .

 பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் தமுஎகச விருது ,  சான்றிதழ், தொகை ரூ.10,000/- ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும்.

விருதுகள்: 
1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல். 

2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல் .

3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு .

4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: கலை இலக்கிய விமர்சன நூல் . 

5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு.

6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு .

7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு .

8. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் .

9 என்.பி.நல்லசிவம் – ரத்தினம் நினைவுவிருது: ஆவணப்படம்.

10. தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்.

11. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது:  குழந்தைகள் இலக்கிய நூல்.

 பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:

12. மு.சி.கருப்பையா பாரதி – ஆனந்த சரஸ்வதி நினைவு விருது: நாட்டுப்புறக் கலைச்சுடர்.

13. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்.

14. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்.

15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை.   ஆகிய  பிரிவுகளில் விருதுக்கு தகுதியான படைப்புகளை படைப்பாளிகள் அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top