Close
நவம்பர் 22, 2024 12:49 காலை

நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை-கலாசார மேம்பாட்டு விழா

pudukkotta

புதுக்கோட்டை புனல்குளம் குவின்ஸ் மகளிர் கல்லூரியில் நேரு.யுவகேந்திரா சார்பில் நடந்த மாவட்ட அளவிலான இளையோர் கலை-கலாசார மேம்பாட்டு விழா

இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா, புனல்குளம் குயின்ஸ் கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கொல்லம்பட்டி திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான இளையோர் கலை மற்றும் கலாசார மேம்பாட்டு விழா புனல்குளம் குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் இளையோரின் கலைத் திறமைகளை மேம்படுத்தும் வகையில் பரதநாட்டியம், தனிநபர் கிராமியப் பாடல்கள், குழு அளவிலான கிராமியப்பாடல், கிராமிய நடனம் போன்ற நமது பாரம்பரிய கலைத் திறமைகளை அடிப்படையாகக் கொண்ட கலைப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஏறத்தாழ 150 இளையோர் பங்கேற்றனர். 700க்கும் மேற்பட்ட இளையோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். கிராமிய பாடகர் கலைமாமணி சத்தியபாலன், கலைநன்மணி கலைச்செல்வி ஆகியோர் போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்து சிறந்த கலைஞர்களையும் கலைக்குழுக்களையும் தெரிவு செய்தனர்.

புதுக்கோட்டை
நேருயுவகேந்திரா சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இளையோர் கலை-கலாசார மேம்பாட்டு விழாவில் பரிசு வென்ற மாணவிகள்

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார். குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் சித்ராதேவி முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் முனைவர்.உரு.இராசேந்திரன் மற்றும் நேரு யுவ கேந்திராவின் தேர்வுக்குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்ற இளையோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

நேரு யுவ கேந்திராவின் திட்ட உதவி அலுவலர் முனைவர் நமச்சிவாயம், கிங்ஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் அற்புத விஜய செல்வி ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் வெள்ளி வீதியார் இலக்கியப் பேரவை தலைவர் முனைவர்.வனிதா வரவேற்றார். நிறைவாக நேரு யுவ கேந்திராவின் கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பகத்சிங் ராமையா  நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை குயின்ஸ் கலை அறிவியல் மகளிர் கல்லூரியைச் சார்ந்த சத்யராஜ் உள்ளிட்டோருடன் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் முரளிதரன்,மணிமேகலை அகல்யா மற்றும் ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top