Close
நவம்பர் 22, 2024 12:19 காலை

நாடு தழுவிய (மார்ச்28-29) வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச்செய்ய தொழில்சங்கங்கள் தீர்மானம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழில்சங்க ஆலோசனைக்கூட்டம்

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வோம்! அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் செயல்படுகின்ற தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி ஏஐசிசிடியூ தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்  மின்வாரிய தொமுச அலுவலகத்தில் தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் எஸ்.செங்குட்டுவன், நிர்வாகி ஜெ.வெங்கடேசன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், துணை செயலாளர் துரை.மதிவாணன், மின் வாரிய தொமுச திட்ட தலைவர் என்.வெங்கடேசன், மின்சார சம்மேளன மாநில துணைதலைவர் பொன் .தங்கவேலு, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் நாடுதழுவிய வேலை நிறுத்தத்தை விளக்கி மார்ச் 22-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு நடத்துவது.

வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கிமார்ச் 24 ,25 தேதிகளில் பேருந்து நிலையங்கள் , ரயில் நிலையங்கள், மக்கள் கூடுகின்ற இடங்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலகங்கள் முன்பு துண்டுப் பிரசுர விநியோகம் செய்வது என்றும், மார்ச் 26ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது.  மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் நாடுதழுவிய வேலை நிறுத்தத்தை தஞ்சாவூர் ஆத்துப்பாலத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது. மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தை காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி முன்பு ஆர்ப்பாட்டமாக நடத்துவது என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஆகிய 3 இடங்களில் அஞ்சலகம் முன்பு மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய மோடி அரசின் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் கொள்கைகளைக் கண்டித்தும், பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வால் ஏழை, எளிய ,நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந் துள்ளன .நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது உள்ளிட்ட தவறான பொருளாதார கொள்கைகளால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகளில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் விவசாயிகள், வணிகர்கள், அனைத்து தரப்பு பொதுமக்கள் பங்கேற்று தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று அனைத்து சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top