புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (16.03.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழர்களின் பாரம் பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள்; அரசு விதிமுறைகளுக்குட்பட்டும், கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றியும் நடத்திட அனுமதி அளிக்கப் பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும்காளைகள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகேஅனுமதிக்கப்பட்டனர். மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளின்படியும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி யும் நடத்தப்பட்டது என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் முனைவர் எஸ்.கே.மிட்டல் , இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, முன்னாள் ஊராட்சித்தலைவர் ப. முருகேசன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.