Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

பொன்னமராவதி அருகே உலக வனநாள் விழிப்புணர்வு ஊர்வலம்

பொன்னமராவதி

ஆலவயல் அரசு பள்ளியில் நடைபெற்ற உலக வனநாள் நிகழ்வையொட்டி பேருந்து பயணிகளிடம் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது

பொன்னமராவதி அருகே ஆலவயல் ஊராட்சியில் உலக வனநாளை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்  நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக வன நாள் விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு  ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சக்திவேல் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் மேரி லென்சி முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் மற்றும் வனச்சரக அலுவலர் மேரிலென்சி ஆகியோரின் உலக வன நாள் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர். உலக வன விலங்குகள் பாதுகாப்பு பற்றிய பேரணியில் வனங்கள் பாதுகாப்பு மற்றும் வன உயிர்களின் பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரங்கள் பொது மக்கள் மற்றும் பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் வழங்கினர்.

ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் வம்பன் புஷ்கரன் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்  விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை ஆலவயல் பேருந்து நிலையம் வரை சென்று  நிறைவு செய்தனர். இதையொட்டி 6  மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் வனவர்கள் மேகலா, சாய்பல்லவி, ராமலிங்கம், இந்துமதி, வனக்காப்பாளர்கள் வித்யா, கனகவள்ளி,ஹேமா, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர்கள் துணைத்தலைவர் சுப்புலெட்சுமி பழனிச்சாமி மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top