புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் 1098 சைல்டு லைன் சார்பில் தாலுகா அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.
திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி தலைமை வகித்தார்.
ஆர்டிஓ சைல்டு லைன் மாவட்ட துணை இயக்குநர் குழந்தைவேலு பங்கேற்று, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல்,குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தை திருமணம் நிறுத்தம் உள்ளிட்ட புள்ளி விவரங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் திருமணச் சான்று வழங்கும் முன் மணமகன், மணமகளின் வயதுச் சான்றிதழை சரிபார்த்து வழங்க வேண்டும். சமீபகாலமாக அதிக அளவிலான குழந்தை திருமணங்கள் செய்ய முயற்சிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் உதவியாளர் மூலம் சைல்டு லைன் களப்பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும்.
திருமண மண்டபம், பேருந்து நிலையம், வட்டார வள மையம்,பள்ளி வளாகம், கிராம நிர்வாக அலுவலகம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1098 சைல்டு லைன் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர் சுதந்திரா தேவி, வட்டார மருத்துவ அலுவலர் சூர்யாகுகன், வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குல்சார்பானு, மகளிர் காவல் உதவி ஆய்வாளர் சத்யபாமா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராசசுரேஷ், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர் பாலமுருகன்.
தங்கராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர் சசிகலா, சமூக விரிவாக்க அலுவலர் பூரணம்பாள், தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் தியாகராஜன், மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கீதா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அப்துல் சலாம், 1098 திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி, அரிமளம் களப்பணியாளர் வசந்த பாரதி, பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி, தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி நன்றி தெரிவித்தார்..