Close
ஏப்ரல் 4, 2025 10:46 காலை

பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக உலக காசநோய் விழிப்புணர்வு  கருத்தரங்கம்

பேலஸ்சிட்டி ரோட்டரி

புதுகை சந்தைப்பேட்டை பள்ளியில் பேலஸ்சிட்டி ரோட்டரி சார்பில் நடந்த உலக காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக உலக காசநோய் விழிப்புணர்வு  கருத்தரங்கம் நடைபெற்றது.

சந்தப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க. தலைவர் துரை மணி  தலைமை வகித்தார்.

டீம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்  மேலாண்மை இயக்குனர் டாக்டர் தனசேகரன் சிறப்புரையாற்றினார். மாணவிகளுக்கு காசநோய் குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. காசநோய் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சுசரிதா வாழ்த்துரை வழங்கினார். துணை தலைமை ஆசிரியர் பரமசிவம் ஆசிரியைகள் சுமதி ராதிகா சித்ரா தேவி மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். நிறைவாக சங்க செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top