Close
செப்டம்பர் 20, 2024 1:19 காலை

புதுகை நகராட்சியில் ரூ.51 லட்சத்தில் நிறைவடைந்த பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி. உடன் எம்எல்ஏ, ஆட்சியர், சேர்மன் உள்ளிட்டோர்

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (28.03.2022) திறந்து வைத்தார்.

 மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் ரகுபதி  பேசியதாவது;
கல்வித் துறையில் தமிழகம் முதன்மையான இடத்தை பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

 கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களிடையே கற்றல், கற்பித்தல் திறனை இடைவெளியின்றி தொடரும் வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பள்ளிகளுக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர், கழிவறை போன்ற வசதிகளை மேம்படுத்த முடியும். இதன்மூலம்,  அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டு கூடுதலான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
எனவே  கல்வித் துறையில் செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது எதிர்கால வாழ்க்கையை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சி, வார்டு எண்.5 கோவில்பட்டியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ், மாணவர்களின் கல்விக்காக ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை இரண்டு வகுப்பறை.

புதுக்கோட்டை நகராட்சி வார்டு எண்.10 மச்சுவாடி துப்புரவு காலனி பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சிறுமின்விசை தண்ணீர் தொட்டி மற்றும் காந்தி பூங்கா அருகில், நகராட்சியின் பொது நிதியின்கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் டாக்ஸி மார்க்கெட் வாகனம் நிறுத்துமிடம் என மொத்தம் ரூ.50.90 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர்  திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, டாக்ஸி மார்க்கெட் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top