Close
நவம்பர் 10, 2024 6:03 காலை

வேலைநிறுத்தம்: பெரும்பாலான பேருந்துகள் இயங்கியதால் திரும்பிய இயல்புநிலை

புதுக்கோட்டை

பொதுவேலை நிறுத்தத்தின் இரண்டாம் நாளில் இயங்கத்தொடங்கிய பேருந்துகள்

பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் இரண்டாவது நாளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய பொது வேலைநிறுத்தம் 28 மற்றும் 29 ஆம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள்  சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் வேலை நிறுத்தம் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று வழக்கம் போல் ஒரு சில பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டது.

இதனால் நேற்று கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பேருந்து இல்லாமல் பாதிப்படைந்து வந்த நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது . அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதால், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் பணிக்கு செல்வதற்கு உதவியாக இருந்தது.

பொது வேலை நிறுத்தம் காரணமாக நேற்று முழு வேலை நிறுத்தம் நடைபெற்ற நிலையில்,  இன்று( செவ்வாய்க்கிழமை) ஆட்டோ பேருந்துகள் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணியினை செய்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top