Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சுதந்தி திருநாள் அமுதப் பெருவிழா ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர்கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் 75-வது சுதந்திர தினவிழா – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு அனைத்துத் துறைகளின் சார்பில், செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த, பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அதன்படி நடைபெறவுள்ள பல்துறை பணிவிளக்கக் கண் காட்சியை சிறப்பாக நடத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (29.03.2022) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

75-வது சுதந்திர தின விழாவை சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா ஆக தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண் டாட தமிழக அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து, புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தி லிருந்து  விடுதலைப்போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பற்றிய சிறு குறிப்புகள் இடம் பெறும் புகைப்படக்கண்காட்சியினை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண்மைத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைத்தல்.

மாரத்தான் ஓட்டப்பந்தயம், மருத்துவ முகாம்கள் அமைத்தல், பள்ளி மாணவ, மாணவிகளிடையே போட்டிகள் நடத்துதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தல், மஞ்சப்பை பயன்பாடு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  உரிய அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், இக்கண்காட்சி அரங்கினை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கிராமங்கள்தோறும் விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top