Close
நவம்பர் 22, 2024 7:41 காலை

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 32 குழந்தைகளுக்கு மறுவாழ்வு நிவாரண உதவி: ஆட்சியர் கவிதாராமு வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 32 குழந்தைகளுக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் மறுவாழ்வு நிவாரண உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு சார்பில் நடந்த நிகழ்வில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 32 குழந்தைகளுக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் மறுவாழ்வு நிவாரண உதவித்தொகையினை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின்  ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 77 ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3,00,000 வீதம் ரூ.2,31,00,000 மும் மற்றும் 2 இரட்டை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5,00,000 வீதம் ரூ.10,00,000 மும் என  மொத்தம் ரூ.2,41,00,000 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 32 குழந்தைகளுக்கு தலா ரூ.3,00,000 வீதம் ரூ.96,00,000 மதிப்பில் மறுவாழ்வு நிவாரண உதவித் தொகை தற்போது  வழங்கப் பட்டுள்ளது. எனவே,  இத்தொகையை  குழந்தைகளின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத் திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top