புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
பின்னர், அமைச்சர் பேசியதாவது; பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சி, சாஸ்தாவயல் குடியிருப்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம் .
சேதுராபட்டி ஊராட்சி, நாட்டியத்தான்பட்டி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம் மற்றும் பி.அழகாபுரி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அடல் டிங்கரிங் ஆய்வகம் மற்றும் பி.அழகாபுரி ஊராட்சி, பில்லமங்களம் கிராமத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடம்.
கே.பள்ளிவாசல் ஊராட்சியில் ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடம் என ஆகமொத்தம் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் மூலம் மாணவியர்களின் திறன் அதிகரித்து, மேற்படிப்பு பயில்வதற்கு உறுதுணையாக அமையும். இந்த ஆய்வகத்தினை மாணவிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தை இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதி பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப சாலைவசதி, பட்டா வழங்கல், வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
எனவே இந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை பெறும் பொதுமக்கள் இதனை தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரம்யாதேவி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம், ஒன்றியக் குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் லெட்சுமணன், ஆர்.எம்.கருப்பையா, சர்புதீன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.