Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

ஜல்லிக்கட்டு காளைகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை

வாகனஓட்டிகளுக்கு ஆர்டிஓ எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஜல்லிக்கட்டு-மஞ்சுவிரட்டு – வடமாடு- எருது விடும் நிகழ்வில் பங்கேற்க   வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது உரிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர்  வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு தொடர்பாக எருதுகளை வாகனத்தில் ஏற்றி செல்வது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  உத்தரவின்பேரில் கீழ்கண்ட நடைமுறை களை பின்பற்ற வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 237 (i) (ii)-ன் கீழ் வாகனங் களில் ஜல்லிக்கட்டு எருதுகளை ஏற்றிச் செல்லும் போது ஒரு எருதிற்கு வாகனத்தில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இடவசதி, நீளம் 2 மீட்டர் 10 சென்டிமீட்டர் மற்றும் அகலம் 1 மீட்டர் ஆகும்.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 237(டி) – ன் படி வாகனத்தின் ஜல்லிக்கட்டு எருதுகள் நிற்கும் தள பரப்பு பகுதிகள் வலுவான மர பலகைகள் கொண்டு தயாரிக்கப் பட்டதாக இருக்க வேண் டும். அல்லது இரும்பு தகடுகள் கொண்டு அமைக்கப்பட்டி ருக்க வேண்டும்.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 237(உ) எருதுகளின் உரிமை யாளர் பயணத்தில் எருதுகளை கவனித்துக்கொள்ள ஒரு நபரை நியமிக்க வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 237(உ) (ii) பயண நேரத்தில் கால்நடைகளுக்கு தேவை யான போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்க வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 237(3) கால்நடை களை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகபட்சம் 30 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும்.

மேற்கண்டவாறு மோட்டார் வாகன விதி படி எருதுகளை கவனமாக ஏற்றி செல்ல அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிப்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top