தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதன் இலக்கிய விருது (2022)க்கு குடவாயில் பாலசுப்பிரமணியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பல்லாயிரமாண்டு கலாச்சாரமும், தத்துவ விசாரமும் தன்னுளடக்கி கவிதை, சிறுகதை, நாவல், கலைகள் என படைப்பின் அனைத்துக் தளங்கள் பற்றியும் தீர்க்கமான பார்வை கொண்ட தனித்துவமிக்க படைப்பாளி மா.அரங்கநாதன், நுட்டமான கலையும் படைப்பாற்றலுமாக எழுந்து நிற்பவை அவரது படைப்புகள்.
அவரது நினைவை ஒட்டி 2018 -ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் 16-ஆம் தேதியன்று மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகளை முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் மா. அரங்கநாதனின் மகன் நீதியரசர் அரங்க. மகாதேவன் வழங்கி வருகிறார்.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழி பெயர்ப்பு. ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை. விமர்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாக பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவர்களது ஒட்டுமொத்த இலக்கிய பங்களிப்பு, செயற்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. விருநுடன் தலா ஒரு லட்சம் கொண்ட ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்படுகிறது.
முதுமுனைவர் ‘குடவாயில்’ பாலசுப்ரமணியன் மற்றும் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது இருவரும் 2022-ஆம் ஆண்டுக்கான மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகளைப் பெறுகின்றனர்.
குடவாயில் பாலசுப்ரமணியன்:
சங்ககாலக் கோநகரமான திருவாரூர் மாவட்ட திருக்குடவாயி லில் பிறந்த இவர், கோயில் கட்டிடக்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். 27 பெருநூல்களையும். 20 சிறு நூல்களையும், 53 ஆய்வரங்க ஆய்வுக் கட்டுரைகளையும், 450-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் படைத்தவர்.
உ.வே. சாமிநாதய்யர் தமிழறிஞர் விருது, திருக்கோயிற் கலைச்செல்வர், ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது. தமிழக அரசின் சிறந்த நூல் விருதுகள் என பல விருதுகளைப் பெற்றவர். கல்வெட்டுகள், செப்பேடுகள், அரிய சிற்பங்கள்: என இவர் கண்டறிந்தவை தமிழக வரலாற்றுக்குப் பெருங்கொ டை. இவர்தம் நந்திபுரம் மற்றும் இராஜராஜேச்சரம் திருவாரூர் திருக்கோயில், கோபுரக்கலை மரபு, தாராசுரம் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சை நாயக்கர் வரலாறு, தேவார மாண்பும் ஒதுவார் மரபும் போன்றவை ஆகச்சிறந்த படைப்புகளாகும்.
டிராட்ஸ்கி மருது:
இம் வயதிலேயே ஓவியக்கலையுடன் ஒன்றிவிட்ட டிராட்ஸ்கி மருது தன் தொடர்ந்த இயக்கத்தின் மூலம், சில புதிய கலைச் சாளரங்களைத் திறந்து வைத்தவர். கணினி ஓவியக்கலை யினை முன்னெடுத்த இனி, உடல் மொழி ஓவியங்களில் நிகழ்த்திக்காட்டி பலப்பல கலப்புகளில் உழன்ற ஓவிய உருவங்களை தமிழ் உருவங்களாய் தன் தனிந்துவத்தால் நிறுவியவர்.
ஓவியர், வடிவமைப்பாளர், கணிப்பொறிவரை கலைஞர், கலை இயக்குனர், எழுத்தாளர். பேச்சாளர் என கலையின் திசை தோறும் விரிகிறது மருதுவின் சிறகுகள். பாரதிதாசன் பல்கலைக்கழக விருது, தமிழக அரசு விருது, கலைமாமணி விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் தமிழ்சங்கங்களால் பாராட்டப்பட்ட மருது. நூல்கள் ஓவியங்கள் என தனது கலைப் பயணத்தைத் தொடர்கிறார்.
மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2022 வழங்கும் விழா:
வரும் (16.04.2022) சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள ராணி சீதை அரங்கில் நடைபெறவுள்ளது.
இசை ஆசிரியர் வலிவலம் முனைவர் ஆர்.எஸ்.வெங்கட்ராமன் இறைவணக்கத்துடன் தொடங்கும் விழாவில் கவிஞர்-சிறுகதை ஆசிரியர் அகரமுதல்வன் நிகழ்ச்சித் தொகுப்பும் வரவேற்புரையாற்றுகிறார்,
‘காலங்களுக்கிடையில் மா. அரங்காநாதன்’ – என்ற தலைப்பில் பெங்களூர் , கிறித்து நிகர்நிலைப் பல்கலைக்கழக மதிப்புறு பேராசிரியர் முனைவர் பழனி. கிருஷ்ணசாமி (ப. சகதேவன்) உரையாற்றுகிறார்
கவிஞர்-ஆவணப்பட இயக்குனர் ரவிசுப்பிரமணியன் விருதாளர்கள் பற்றிய அறிமுகம் செய்து வைக்கிறார்,
விழாவுக்கு புதுதில்லி உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன் தலைமை ஏற்று சாகித்திய அகாதெமி பதிப்பித்த இந்திய இலக்கியச் சிற்பிகள்: மா. அரங்கநாதன் நூலை வெளியிட்டு, விருதுகள் வழங்கி சிறப்புரையாற்று கிறார்.
விருதாளர்கள் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோர் ஏற்புரையாற்றுகின்றனர்.
கவிஞர் – விமர்சகர் எஸ். சண்முகம் நன்றியுரையாற்றுகிறார்.