Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

ரயிலில்  அவசரகால சங்கிலியை (Emergency Chain) இழுப்ப தற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள்..

ரயில் பெட்டி சங்கிலி

ரயில் பெட்டியிலுள்ள அவசரகால சங்கிலி பிடித்து இழுப்பதற்கு தேவையான காரணங்கள்

ரயிலில்  அவசரகால சங்கிலியை (Emergency Chain) இழுப்ப தற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய  விதிமுறைகள்.

ரயில் பயணத்தின்போது எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற லாம். அத்தகைய அவசர சூழ்நிலைகளில் ரயிலை உடனடி யாக நிறுத்தியாக வேண்டிய தேவை ஏற்படும். எனவே பயணிகளுக்கு உதவும் வகையில், ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் (Coach) எமர்ஜென்ஸி செயின்களை (Emergency Chain) இந்திய ரயில்வே வழங்குகிறது.

இந்த செயினை இழுத்தால் ரயில் நிற்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்தெந்த காரணங்க ளுக்காக செயினை இழுத்து ரயிலை நிறுத்தலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஒரு சிலர் தேவையில்லாத காரணங்களுக்காக செயினை இழுத்து ரயிலை நிறுத்தி விடுகின்றனர். இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

செயின்களை தவறாக பயன்படுத்துவதால், ரயில்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைவதில் தேவையில்லாத கால தாமதம் ஏற்படுகிறது. அத்துடன் இதன் காரணமாக இந்திய ரயில்வே துறைக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. மேலும் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் மற்ற பயணிகளும் இதன் காரணமாக தேவையில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

தேவையில்லாத காரணங்களுக்காக செயினை இழுத்து ரயிலை நிறுத்தியதாக கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மேற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு படை (Railway Protection Force – RPF) கைது செய்த பயணிகளின் எண்ணிக்கை மட்டுமே.

இந்தியா முழுவதும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின் றன. எனவே தேவையில்லாமல் செயினை இழுத்தி ரயிலை நிறுத்தினால், உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவ தற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க இந்த செய்தி உங்களுக்கு உதவி செய்யும்.

ஏனெனில் எந்தெந்த காரணத்திற்காக செயினை இழுத்து ரயிலை நிறுத்தலாம்? என்பதை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம். ரயில்களில் செயினை இழுப்பது தொடர்பாக இந்திய ரயில்வே வகுத்துள்ள இந்த விதிமுறைகளை அனை வரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

மருத்துவ அவசரம் (Medical Emergency): பயணிகள் யாருக் காவது உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப் பட்டால், செயினை இழுத்து ரயிலை நிறுத்தலாம். சம்பந்தப்பட்ட பயணியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை இருந்தாலோ அல்லது அவருக்கு மருந்துகள் தேவைப்பட்டாலோ நீங்கள் தைரியமாக செயினை இழுக்க முடியும்.

தீ (Fire): தீ விபத்து ஏற்பட்டாலும், செயினை இழுத்து ரயிலை நிறுத்தலாம். பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்வது குற்றமாக கருதப்படுகிறது. தீபாவளி பண்டிகை சமயங்களில் இந்திய ரயில்வே இது தொடர்பாக பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறது.

ரயிலில் தீ விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பதுதான் இதன் காரணம். இந்த விதிமுறைகளை பயணிகள் மீறினாலும், வேறு சில காரணங்களாலும் ரயில்களில் திடீரென தீ பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி தீ பற்றி விட்டாலும் கூட, உங்கள் கோச்சில் உள்ள செயினை பிடித்து இழுத்து உங்களால் ரயிலை நிறுத்த முடியும்.

கொள்ளை (Robbery): ரயில்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இந்தியாவின் ஒரு சில பகுதிகளில், ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எனவே கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் ரயில் செல்லும்போது, கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

அதாவது ஆர்பிஎஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதலாக ரயிலில் பயணம் செய்வார்கள். எனவே பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, ரயில்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட, நீங்கள் செயினை பிடித்து இழுத்து, ரயிலை உடனடியாக நிறுத்தலாம்.

வயதானவர்கள் மற்றும் மாற்றத்திறனாளிகளுக்காக: வயது முதிர்ந்த அல்லது மாற்றுத்திறனாளிகளுடன் ரயிலில் ஏறும்போது, செயினை பிடித்து இழுப்பது குற்றம் கிடையாது. வயது முதிர்ந்த அல்லது மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏறுவதற்கு சிரமப்படுவார்கள். எனவே இயல்பானவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் ரயிலில் ஏற நேரம் எடுக்கலாம்.

அதற்குள் ரயில் புறப்படுகிறது என்றால், நீங்கள் செயினை பிடித்து இழுக்கலாம். ஆனால் யாரையாவது ரயிலில் ஏற வைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே செயினை பிடித்து இழுத்து ரயிலை தாமதம் செய்வது குற்றமாக கருதப்படும். உதாரணத்திற்கு ரயில் நிலையத்திற்கு வந்து சேராத ஒரு பயணிக்காக, ரயிலின் புறப்பாட்டை தாமதம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

தண்டனைகள்: தேவையில்லாமல் செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வே சட்டத்தின்படி (Indian Railways Act), அத்தகைய நபர்களுக்கு அபராதம் விதிக் கப்படலாம். கைது நடவடிக்கைகளும் கூட மேற்கொள்ளப் படும். இதை இந்த செய்தியின் தொடக்கத்திலேயே நாங்கள் கூறியுள்ளோம்.

அத்துடன் சிறை தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே ரயில்களில் செயினை பிடித்து இழுப்பதற்கு முன்பு, இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் செயினை பிடித்து இழுப்பதற்கான காரணம் நியாயமானதாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருந்தால் மட்டும் ரயிலை நிறுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top