மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் புதுக்கோட்டையை அடுத்த காவேரி நகரில் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னவாசல் ஒன்றியம் காவேரி நகர் தபால்நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராதிகா உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசலை மானிய விலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.