புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தற்காலிக ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் ரத்தக் கொடையாளர்கள் அணுகி ரத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகக் காரணங்களால் 14.4.2022 -ஆம் தேதி முதல் 24.4.2022 -ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்தம் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுவரை சமூக சேவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ரத்த வங்கியில் எப்போதும் போல ரத்த தானம் கொடுக்கலாம். வரும் 25.4.2022 -ஆம் தேதி முதல் வழக்கம் போல ராணியார் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் சமூக சேவர்கள் ரத்தம் கொடுக்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக தற்சமயம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த வங்கியை பயன்படுத்தலாம் என ரத்தக் கொடையாளர்கள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.