Close
நவம்பர் 22, 2024 7:01 காலை

சாலைவிதிகள்: கோபியில் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

கோபி

கோபியில் நடைபெற்ற போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்கும், தலை கவசம், சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பதின் அவசியத்ததை வலியுறுத்தி காவல்துறை, போக்குவரத்து துறை, தன்னர்வ தொண்டு அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோபி காவல் நிலைய சரகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றன.

கோபி சீதா கல்யாண மண்டபத்திலிருந்து கல்லூரி பிரிவு வரை இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் இரண்டு , மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 200 வாகனங்களில், காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் 300 பேர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புரையாற்றினார்.  நிகழ்ச்சியில் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர், கோபி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், நம்ம கோபி தன்னார்வலர் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 13 மாணவர்கள், கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்கள், தன்னார்வலர் அமைப்பினருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் மற்றும் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு ஓட்டுனர் உரிமமும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டது.

சாலை விதிகளை முறையாக பின்பற்றி ஈரோடு மாவட்டத்தினை விபத்தில்லாத மாவட்டம் என்ற நிலையை அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மாவட்டகாவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top