புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவமழை, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள், தன்னை தானே எவ்வாறு பாதுகாத்து கொள்வது பற்றிய விழிப்புணர்வு ஒத்திகை செயல்விளக்கம் மாணவ, மாணவிகள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.
தீ தொண்டு வாரத்தையொட்டி திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை பானுப்பிரியா ஆலோசனையின்படி பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில், அப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வாகன விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, நீர்நிலைகள், இயற்கை இடர்பாடுகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொது மக்களை எவ்வாறு மீட்பது குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் செயல் முறை ஒத்திகை மூலம் செய்து காண்பித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தீ விபத்து நிகழும் போது முன் தீ தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க வேண்டும்.
தீ விபத்து மற்றும் பாம்பு, மாடு, ஆடு, ஏதேனும் விபத்து என்றால் 101 எண்கள் மூலம் தீ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இதில் அப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ,மாணவிகள் என 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.