Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் பாதயாத்திரை பக்தர்களுக்கு உதவி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது

புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர்,பிஸ்கட், மோர், மிக்சர் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜா , செயலாளர் ஆர்.ஆரோக்கியசாமி,  துணைத்தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இரவில் சாலையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல சிவப்பு நிற பிரதிபலிப்பான்களை ஒட்டி சாலைகளில் ஓரமாக செல்லுமாறு வலியுறுத்தினர்.

இதில், சங்க உறுப்பினர்கள் சித.லெட்சுமணன், என்.கே. சரவணன், பழனியப்பன், அப்துல் அஜிஸ், கண்ணப்பன் அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top