புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (25.04.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 337 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர்.
இம்மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,34,130 மதிப்பீட்டில் அரசு மானியத்திற்கான காசோலையினையும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நீரில் மூழ்கி இறந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ், தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.