Close
நவம்பர் 22, 2024 12:10 காலை

புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம்

புதுக்கோட்டை

ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடந்த புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் (28.04.2022) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நகர்புறங்களில் உள்ள குடிசைவாசிகள் மற்றும் நகர்புற ஏழைகள் வாழ்க்கை நிலைமையை வசதி செய்தல் மற்றும் சாத்தியமான சூழலை உருவாக்குதல், மாநில அளவில் கொள்கை உருவாக்கும் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.

துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி இணைப்புச் சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கு தல் போன்றவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.

பிற சமூகத்துறைகளுடன் ஒருங்கிணைப்பின் மூலம் நகர்புற ஏழைகள், நகர்புற குடிசை வாசிகளுக்கு நலத்திட்டங்கள் சென்றடைதல், நியாயவிலைக்கடை, காவல்நிலையம், நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உருவாக் குதல்.

நகர்புற ஏழைகள் மற்றும் சுகாதாரமற்ற குடியிருப்புகளில் வாழும் மக்களின் பொதுக்குறைபாடுகளான தெருக்களில் குப்பை தொட்டி அமைத்தல், கழிவுநீர் கால்வாய் பிரச்னைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவை குறித்தும்.

இத்தகைய குடியிருப்புகளில் மகளிர்சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளித்தல், இ-சேவை மையம், ஆவின் நிலையம், செல்போன் டவர்கள் அமைத்தல் போன்றவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நிர்வாகப் பொறியாளர் த.இளம்பரிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஷகிலாபீவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top