Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

திருமயத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை

திருமயத்தில் விவசாயிகளுக்கு வேளாண்பொருள்களை வழங்கிய சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள் களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்.எஸ்.ரகுபதி  (02.05.2022) வழங்கினார்.

இதில், சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில்புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 1,000 விவசாயிகள் பயனடையும் வகையில் முன்னோடித் திட்டமான கூட்டுப்பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 20 விவசாயிகளை கொண்டு 5 விவசாய ஆர்வலர் குழுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். விவசாய ஆர்வலர் குழுக்களின் உறுப்பினர்களான 100 விவசாயிகளைக் கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு உறுப்பினர்களும் தலா ரூ.1,000 நிதி பங்களிப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கு தலா ரூ.100 என நிதிபங்க ளிப்பு திரட்டப்பட்டு, வங்கியில் செலுத்தி கூட்டுப்பண்ணை யம் குழு என வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும். இக்குழுக்களுக்கு வேளாண் கருவிகள் விவசாயிகளின் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ள ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதன் முக்கிய நோக்கங்கள் சிறு, குறு விவசாயிகளை கண்டறிந்து குழுக்கள் அமைக்க வேண்டும். விவசாயிகள் தானாகவே முன்வந்து இணைதல் வேண்டும். விவசாயிகள் நிலத்தின் உரிமையை தக்க வைத்தல். நிலபங்களிப்பு மற்றும் உழைப்பின் அடிப்படையில் மொத்த விளை பொருட்களுக் கான பங்குகளை ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் கிடைக்க செய்தல் ஆகும்.

இதன்மூலம் சிறு, குறு விவசாயிகள் அனைத்து பயன்களையும் பெற்று வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசால் கூட்டுப்பண்ணையம் என்ற முன்னோடித் திட்டம் அறிவிக்கப்படுகிறது. விவசாயிகளின் உற்பத்தியா னது பலமடங்கு பெருகுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியும் பெருகும். வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விட்டால் மற்ற அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்றுவிடலாம்.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண் உற்பத்தியை பலமடங்கு பெருக்கி, புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்எஸ்.ரகுபதி.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், ஆர்.எம்.கருப்பையா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top