Close
நவம்பர் 22, 2024 5:32 காலை

 அட்சய திருதியை… புதுக்கோட்டை நகைக்கடைகளில் திரண்ட மக்கள்…

புதுக்கோட்டை

அட்சயதிருதியையையொட்டி புதுக்கோட்டை குமரன் நகை மாளிகையில் சென்ற வாடிக்கையாளர்கள்

அட்சய திருதியை முன்னிட்டு புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு நகைக்கடைகளில்  ஆயிரக்கணக்காணோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 புதுக்கோட்டை  வடக்கு ராஜவீதி   ஸ்ரீ குமரன் தங்க மாளிகை யில்  நடைபெற்ற அட்சய திருதியை விழாவில்    நெக்லக்ஸ்,  ஆரம்,  செயின், மோதிரம், தோடு, ஜிமிக்கி  , வெள்ளி விளக்கு, கொலுசு  போன்ற ரகங்களை பெண்கள் குடும்பத்தினருடன் வந்து ஆர்வமுடன்  வாங்கி சென்றனர்.

தங்க மாளிகையில் குபேர லெட்சுமி சந்தனகாப்பு  மலர் அலங்காரம் பூஜை செய்யப்பட்டிருந்தது மேலாளர் பணியாளர்கள் வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.

புதுக்கோட்டைஇதே போல, புதுக்கோட்டை  கீழராஜவீதியில் உள்ள வயி.ச.வெங்கடாஜலம்பிள்ளை ஜுவல்லரி, புவனேஸ்வரி தங்கமாளிகை, பார்வதி ஜூவல்லரி,  புவனேஸ்வரி ஜூவல்லர்ஸ்,  கிருஷ்ணாஜூவல்லர்ஸ் உள்பட பல்வேறு கடைகளில் மக்கள் திரண்டு சென்று தங்களுக்கு விரும்பமான நகைகளை வாங்கிச்சென்றனர்.
அட்சய  திருதியை பற்றி    நகை வியாபாரி கூறுகையில்,          அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது .இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விட்டதால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர். எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை  உரிமையாளர்கள் நம்புகின்றனர்
அட்சய திருதியைபற்றி…    அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ மேன்மேலும்‌ வளரும்‌. அன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌ என்பது மக்களின் நம்பிக்கை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top