புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்துபுகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு 10 நாள்கள் கலைநிகழ்ச்சி கள் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக, அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்களுடன் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் (04.05.2022) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு 07.05.2021 அன்று பதவியேற்று 06.05.2022 அன்றுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது.
அதனடிப்படையில் ஓராண்டில் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய ‘ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்பு ணர்வு கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் தெரிந்து பயன்பெறும் வகையில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் 10 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், புகைப் படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைத்து நடத்துவது தொடர்பாக, அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்களுடன் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, வேலைவாய்ப்புத் துறை, கலைப்பண்பாட்டு த்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண்மைத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைத்தல்.
தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை காட்சிப்படுத்தும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைத்தல், குழந்தைக ளுக்கு பொழுது போக்கு அம்சங்கள் அமைத்தல், இ-சேவை மேசை அமைத்தல், எல்.இ.டி. வாகனத்தை சாதனை விளக்க ஊர்;தியாக பயன்படுத்துதல், கருத்தரங்குகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடத்துதல்.
வணிகக் கடைகள் அமைத்தல், உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், மஞ்சப்பையில் மரக்கன்றுகள் வழங்குதல், சாதனை விளக்க மடிப்பேடு வழங்குதல், பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குள் உரிய அறிவுரைகளை வழங்கப்பட்டது.
எனவே இந்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதாராமு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.