Close
நவம்பர் 22, 2024 7:35 காலை

உயிர் கொடுத்த அன்னையரைக் கொண்டாடுவோம்..!

அன்னையர் தினம்

உயிர் கொடுத்த அன்னையரைக் கொண்டாடுவோம்..!

அன்னையர் தின வரலாறு தெரியுமா..? அன்பு, கருணை, பாசம், தியாகம் என அனைத்தையும், நமக்கு முழு மனதோடு தரும் அன்னையின், உழைப்பையும், அன்பையும், அவர்களின் தியாகத்தைப் போன்றும் விதமாக இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அன்னையர் தினம் வரலாறு:

அமெரிக்கப் பெண்ணான அன்னா ஜார்விஸின் அன்னை ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ், அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது பல்வேறு நற்பணிகளை செய்தவர். அவரின் தியாகத்தை போற்றும் வகையில், 1908 ஆம் ஆண்டு புனித ஆண்ட்ரூ மெதாடிஸ்ட் தேவாலயத்தில் தன் தாயின் நினைவேந்தலை நடத்தினார் அன்னா.

மேலும், அவர் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களின் தியாகத்தையும் கொண்டாடும் விதத்தில், 1905 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அன்னையர் தினத்தை அங்கீகரித்து விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று 1941 ஆம் ஆண்டு முதல் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அன்னையர் தினத்தை அனுசரிக்க அரசு அனுமதி அளித்தது.

அன்னையர் தினம்:

இருப்பினும், அரசு விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து, உலகம் முழுவதும் ஆண்டு தோறும் அன்னையர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. அதேபோன்று, இந்த ஆண்டு உலகம் முழுவதும் வரும் மே 8 அன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

தாய்மார்களைக் கொண்டாடுவதற்கும், அவர்களின் தியாகங்களை போற்றுவதற்கும் இந்த ஒரு நாள் போதாது. குறிப்பாக, இந்த நாளில் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து, தாய்மார்களின் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து அவர்களை மகிழ்விப்பது சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top