Close
நவம்பர் 22, 2024 5:37 காலை

காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்: மே18 -ல் ஏலம் விடப்படுமென காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை

காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினரால் மது தொடர்பான குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்படுமென  அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் மது தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர வாகனம் 2, மூன்று சக்கர வாகனம் 1 மற்றும் இருசக்கர வாகனம் 19 என மொத்தம் 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

மாவட்ட ஆட்சியர்  உத்தரவின் பேரில் துணை இயக்குநரால் (தானியங்கி பணிமனை)  மதிப்பீடு செய்யப்பட்டு காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்

புதுக்கோட்டை

முன்னிலையில்  எதிர்வரும் 18.05.2022 அன்று காலை மணி யளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதா னத்தில் மாவட்ட ஆட்சியரால்  அமைக்கப் பட்ட குழு முன்னிலையில் பகிரங்க ஏலம் விடபட்ட உள்ளது.

அதுசமயம் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன் பணத்தொகை 1000, மூன்று சக்கர வாகனத்திற்கு முன் பணத்தொகை 2000 மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு முன் பணத்தொகை 5000 தொகை செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் ஏலம் எடுத்த நபர்கள் ஏலத்தொகையுடன் மாநில அரசுக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசுக்கான ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து செலுத்திய பிறகே ஏலம் எடுத்த வாகனம் ஏலம் எடுத்த நபரிடம் தகுந்த சான்றிதழுடன் ஒப்படைக்கப்படும்.

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் வாகனத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 16.05.2022 மற்றும் 17.05.2022 அன்று காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பார்வையிடலாம். அதேபோன்று ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் ஏல முன் பணத்தொகையை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தற்காலிக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்.

18.05.2022  -ஆம் தேதி எக்காரணத்தை கொண்டும் டோக்கன் வழங்கப்பட்டமாட்டாது.டோக்கன் இல்லாதவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டமாட்டார்கள்.  டோக்கன் பெற்று ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுக்காத நபர்கள் ஏல முன்பணத் தொகையை அன்று மாலையே திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்த வாகத்திற்கு உரிய தொகை செலுத்தாமல் இருந்தால் முன் பணத்தொகையை திருப்பி தர இயலாது எனவும்  காவல்துறை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top