Close
நவம்பர் 21, 2024 11:41 மணி

பொன்னமராவதி அருகே தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற பேரிடர் மீட்பு பயிற்சி

மறவாமதுரை ஊராட்சியில் தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில்  பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் வட்டம் மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.

திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை பானுப்பிரியா ஆலோசனையின்பேரில், பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி முன்னிலையில்,

மறாவமதுரை பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானா இயற்கை இடர்பாடு கள்,பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொது மக்களை எவ்வாறு மீட்பது குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் விழிப்புணர்வு  செயல் விளக்கப் பயிற்சி  அளித்தனர்.

இதில்,  தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் பேசுகை யில்,  தீ விபத்து நிகழும் போது முன் தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க வேண்டும், தீ விபத்து மற்றும் பாம்பு, மாடு, ஆடு, ஏதேனும் விபத்து என்றால் 101 எண்கள் மூலம் தீ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதில் தீயணைப்பு வீரர்கள், ஊராட்சித் தலைவர், ஊர் பொது மக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top