Close
ஏப்ரல் 4, 2025 3:54 மணி

வறுமையிலும் நேர்மை: தேவகோட்டை மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்

சிவகங்கை

பள்ளி மாணவரின் நேர்மையை பாராட்டிய தேவகோட்டை பள்ளி நிர்வாகம்

வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட பள்ளி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மை மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இப்பள்ளியில் 8 – ம் வகுப்பு படித்து வருபவர் க.சந்துரு . காலையில் பள்ளி வளாகத்தில் கீழே ரூபாய் 100 கிடந்துள்ளது. அதனை பார்த்த சந்துரு வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்துள்ளார்.

மிக கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் ,தந்தை தவறிய நிலையில் தாய் மட்டுமே கூலி வேலைக்கு சென்று வரும் நிலையிலும்,பணத்தை பார்த்த உடன் தனக்கு வைத்துக் கொள்ளாமல் நல்ல எண்ணத்துடன்,நேர்மையுடன் பணத்தை எடுத்து கொடுத்த மாணவரை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசு வழங்கினார்.

நிகழ்வில் மாணவரின் தாயார் மகேஸ்வரிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவரின் தாய் தனது மகனின் செயலை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர். நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top