Close
நவம்பர் 22, 2024 12:09 காலை

மீன்பிடித் தடைக் காலம்: ஈரோட்டில் மீன்விலை கடும் உயர்வு

ஈரோடு

ஈரோட்டில் மீன்கள் விலை உயர்வு

மீன்பிடித் தடைக் காலம் என்பதால்ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனையானது.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடல் மீன்கள் இங்கு நேரடியாக கொண்டு விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த மார்க்கெட்டில் தினமும் 15 டன் மீன்கள் வரத்தாகி வந்தது. தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் கடந்த சில நாட்களாக இந்த மார்க்கெட்டிற்கு கேரளாவில் இருந்து மீன்கள் வரத்து ஆகி வருகிறது. குறைந்த அளவே வரத்தாகி வருவதால் மீன்கள் விலையும் உயர்ந்துள்ளது.

இன்று மீன் மார்க்கெட்டிற்கு கேரளாவில் இருந்து வெறும் 7 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இதனால் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ. 150 வரை உயர்ந்துள்ளது. உதாரணமாக கடந்த மாதம் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ .750 வரை விற்பனையானது.

ஆனால் இன்று வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.900-க்கு விற்பனை யானது. இதைப்போல் இன்று மற்ற மீன்கள் விலை (கிலோ)  கொடுவா -450, அயிலை-250, பாறை – 450, சங்கரா – 350, விளா 450, இறால் – 500, மத்தி – 200, நண்டு – 400, திருகை-300, சீலா – 400, முரல் – 350. இதைப்போல் இன்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top