Close
செப்டம்பர் 20, 2024 1:46 காலை

ஜூன் 3 -ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள்: தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை

கலைஞர் பிறந்தநாள் பேச்சுப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 03.06.2022 அன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட  தகவல்:

புதுக்கோட்டைதமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் கருத்துகளையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில்   அவரது பிறந்த நாளில் 03.06.2022 (வெள்ளிக்கிழமை) தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பெற உள்ளது.
மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.

போட்டி வரும்  03.06.2022 -ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்து தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் (கலைக்கல்லூரிகள், தொழில்நுட்பக்கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகள்) பயிலும் மாணவ மாணவியர் மட்டுமே இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்க முடியும்.

கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டியில் ஒரு கல்லூரியிலிருந்து இருவர் மட்டுமே பங்கேற்கலாம்.போட்டிக் குரிய தலைப்பு பெரும்பாலும் முத்தமிழறிஞர் கலைஞர் பற்றியே அமையும். போட்டிக்கான தலைப்பு நடுவர்கள் முன்னிலையில் போட்டி தொடங்கும் முன்பு அறிவிக்கப்பெறும்.

போட்டி தொடர்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்தது சுற்றறிக்கையும் போட்டியில் பங்கேற்பதற்கான படிவம் மற்றும் விதிமுறைகள் அனுப்பிவைக்கப்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04322 228840 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்குபெற்றுப் பயனடையலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top