Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய்த்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங் கள் குறித்த, மாவட்ட வருவாய் நிர்வாக கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (18.05.2022) நடை பெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  வருவாய்த்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் முதியோர் உதவித்தொகை வழங்குதல், பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வருவாய்த்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் வசதிக்காக தமிழக அரசு வருவாய்த் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும்.

மேலும் இணையவழி பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உரிய காலத்திற்குள் முடித்திடவும், உட்பிரிவு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் அரசுப் பணிகளுக்காக இடம் தேர்வு செய்யும் பணிகளையும் உரிய காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருவாய்த்துறையின் சார்பில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நேரத்தில் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) து.தங்கவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அமுதபிரியா, கோட்டாட்சியர்கள் அபிநயா, குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top