கண்டியாநத்தம் ஊராட்சியில் காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கான சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது..
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
திருச்சி சரக காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, துணைத் தலைவர் சரவண சுந்தர் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆலோசனையின் பேரில், பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் பெண் தலைமைக் காவலர் விமலாம்பாள் ஆகியோர் கேசராபட்டி கிராமத்தில் நடைபெற்ற பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பேசினர்.
குழந்தைகளுக்கான சுய பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளை தீயவர்களிட மிருந்து எவ்வாறு தாற்காத்து கொள்வது மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும்,பெண்கள் பாதுகாப்பு எண்கள் 181 மற்றும் குழந்தை கள் பாதுகாப்பு எண் 1098 பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான எண் 14417 ஆகிய உதவி எண்கள் குறித்தும் கிராம பெண்களிடையே விளக்கி கூறினர்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முருகேசன், வார்டு உறுப்பினர் மகத்நிஷா, பகுதி சுகாதார செவிலியர், செவிலியர் சந்திரகலா, அங்கன்வாடி பணியாளர் கருப்பாயி மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் பி. முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.