Close
நவம்பர் 22, 2024 10:13 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 ஊராட்சிகளில் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை

குலமங்களத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை   தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 இலட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலிக்காட்சி வாயிலாக இன்று (23.05.2022) தொடங்கி வைத்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருவரங்குளம் ஒன்றியம், குளமங்கலம் (தெற்கு) ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தலைமையில்   நடைபெற்ற நிகழ்ச்சியில்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க, முதல் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் செயல்படுத் தப்படுகிறது.

இச்சீரிய திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டு மொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங் களாக மாற வேண்டும் என்பதே நோக்கமாகும்.இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை 13 துறைகளை உள்ளடக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 85 ஊராட்சிகளில் 1,002 ஏக்கர் பரப்பளவில் 1,339 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 68 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் 2 ஏக்கர் பரப்பளவில் குறுகியகால பயிர்களான பயிர் வகைகளை பயிர் செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான ஆழ்துளை கிணறு வசதி ஏற்படுத்துதல், விதைகள் வழங்குதல் போன்றவை செயல்படுத்தபட உள்ளன.

எனவே விவசாயிகள் அனைவரும்  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்   அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
இந்நிகழ்ச்சியில் 200 விவசாயிகளுக்கு தலா 3 வீதம் 600 தென்னங்கன்றுகளை 100 சதவீத மானியத்தில் ரூ.30,000 மதிப்பிலும், 15 விவசாயிகளுக்கு 5கிலோ உளுந்து விதைகள் வீதம் 75 சதவீத மானியத்தில் ரூ.5,625 மதிப்பிலும், 5 விவசாயி களுக்கு ரூ.3,000 வீதம் ரூ.15,000 மதிப்பில் விசை தெளிப்பான்க ளையும்,5 விவசாயிகளுக்கு தலா ரூ.750 மானியத்துடன் ரூ.3,750 மதிப்பலான கை தெளிப்பான்களையும் அமைச்சர்  வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து  சட்டப் பேரவை விதி -110ன் கீழ்  தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தை களில், வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத்தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு ள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியினை மேம்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அரசு வழிகாட்டுதலின்படி மார்ச்-2022 -ல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் மூலமாக தமிழகத்திலுள்ள சுமார் 37 இலட்சம் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘சிறப்பு வளர்ச்சிக் கண்காணிப்பு இயக்கம்” நடத்தப்பட்டதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 36,501 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத்தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே முதற்கட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந் து 23.05.2022 ‘ஊட்டச்சத்தினை உறுதி செய்” என்ற முகாமி னை குலமங்களம் தெற்கு அங்கன்வாடி மையத்தில் தொடங் கி வைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவிடப் பட்டு அக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சத்துமாவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் வெற்றிவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top