Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

மாதவிடாய் சுகாதார நாள்… அரசுப்பள்ளிக்கு நாப்கின் வழங்கல்…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் மகளிர் பள்ளிக்கு நாப்கின் வழங்கிய சமூக ஆர்வலர்

மாதவிடாய் சுகாதார தினமான (மே 28)  புதுக்கோட்டை சமூக ஆர்வலர்  வெங்கடேஷ் (அப்பு) என்பவர்,      மாணவிகளின் பயன்பாட்டிற்காக புதுக்கோட்டை இராணியார் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு  135 நாப்கின்களை வழங்கினார்.

 புதுக்கோட்டையில் வாசிப்பின் மூலமும் சேவைகள் மூலமும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் புத்த அகம் குழுவில் , மாதவிடாய் சுகாதார தினம் மே 28 என்ற ஒரு பதிவைப் பார்த்த  சமூக ஆர்வலர் வெங்கடேஷ், அரசு பள்ளி கல்லூரி மாணவிகள் தங்களுடைய இக்கட்டான சூழலில் நாப்கின்களை உடனடியாக அதுவும் இலவசமாக பெற்றால் அவர்களுக்கு  உதவிகரமாக நினைத்தார்.

அதுவும் இதே நாளிலேயே தன் இத்தகைய சேவையை தொடர எண்ணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றாண்டை தாண்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று 135 நாப்கின்களை பள்ளி அலுவலகத்தில் கொடுத்து தன் சேவையை தொடங்கினார்.

உடனடியாக நாப்கின்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அடுத்தடுத்து மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இத்திட்டத்தை தன்னுடைய சேவையாக விரிவுபடுத்தப் போவதாயும் தெரிவித்தார். ஒருமணி நேரத்திற்குள் தன்னுடைய புலனச் செய்தியால் ஒரு சேவையை தொடர்ந்திருக்கும்  வெங்கடேஷ் (அப்பு) அவர்களை பாண்டியன் புத்த- அக குழுவினர் பாராட்டினர்.

இந்த சேவையின் பலனறிந்து மாணவிகள் சரியான விதத்தில் பயன் படுத்திக்கொண்டால் சேவையின் நோக்கமும் நிறைவடையும்.

தகவல்: டெய்ஸி ராணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top