பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் குப்பைகள் தரம் பிரிப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமையில், துணைத்தலைவர் வெங்கடேசன், வார்டு கவுன்சிலர் சாந்தி ஜெயராமன், செயல் அலுவலர் மு.செ.கணேசன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி 8வது வார்டு மற்றும் 10 -ஆவது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து வழங்குவது பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
மேலும் பேரூராட்சி எட்டாவது வார்டு, பத்தாவது வார்டுக ளிலுள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வில் குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து வழங்குவது என்று பொதுமக்களிடையே செயல் அலுவலர் கணேசன் விளக்கி கூறினார்.
இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், டெங்கு களப்பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், சுய உதவி குழு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.