Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

பிற்படுத்தப்பட்டோர் -மிகப்பிற்படுத்தப்பட்டோர்- சீர்மரபினருக்கு  பொருளாதார மேம்பாட்டு கடனுதவி: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

பிசி-எம்பிசி-டிஎன்சி இனத்தவருக்கு கடனுதவி திட்டம்

பிற்படுத்தப்பட்டோர்-மிகப்பிற்படுத்தப்பட்டோர்- சீர்மரபின ருக்கு  பொருளாதார மேம்பாட்டு கடனுதவி  ஆட்சியர் தகவல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார மேம்பாடு அடைய கடன் திட்டங்கள் செயல்ப டுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமால் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

பொதுகால கடன் திட்டம், தனி நபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15  இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 % சதவிகிதத்திலிருந்து 8 % வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2.00  இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5% ஆகும்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15  இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4% ஆகும்.

மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)  தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படு வார்கள்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 இலட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15.00 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகதம் 5% ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு பயனாளிக்கு ரூ.30 ஆயிரம்  2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம்  வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6% ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப் பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top