Close
நவம்பர் 22, 2024 8:44 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வி வாகனங்கள் ஜூன் 15 -இல்  ஆய்வு செய்யப்படவுள்ளது

புதுக்கோட்டை

தனியார் பள்ளி பேருந்துகள் வரும் 15-ஆம் தேதி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வி வாகனங்கள் ஜூன் 15 -இல்  ஆய்வு செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்  ப.ஜெய்சங்கர்  வெளியிட்ட  தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டும், விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி சாலைப் பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வருகிற 15.06.2022 அன்று காலை 9  மணிக்கு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளிகளின் கல்வி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் நிஷாபார்த்திபன்  ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்யப்படவுள்ளன.

எனவே ஆய்விற்கு வரும் வாகனங்களோடு, ஓட்டுநர்கள் அவ்வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனத்தின் அசல் ஆவணங்கள், நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ஓட்டுநர் பெயர் வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் ஆய்விற்கு 15.06.2022 அன்று கொண்டு வருமாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ப.ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top