Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி ஏற்கும் அலுவலர்கள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு, தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும்  (15.06.2022) ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி விவரம்:

‘இந்திய குடிமகன்- குடிமகளாகிய நான், முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்  என்றும் உறுதி கூறுகிறேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதினை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் எடுத்துக்கூற அதனை அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ருதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top