நேரு யுவ கேந்திரா மற்றும் சமூக நலத்துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல்கள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
முதியோர் கொடுஞ்செயல்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் சமூக நலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதன்படி, நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து செயல்படும் இளைஞர் மகளிர் மன்றங்களுக்கு தக்க வழிகாட்டுதல் அளித்ததின் பேரில், அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி ரோஜா மகளிர் மன்றம் மற்றும் இலுப்பூர் ஜீவா நகர் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம், விராலிமலை ஒன்றியம் வில்லாரோடை கிராம சுவாமி விவேகானந்தர் இளைஞர்
நற்பணி மன்றம், குன்றாண்டார்கோயில் ஒன்றியம் தெம்மண்டாபட்டி சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம், கரம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டை கீழப்பட்டி சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம், புதுக்கோட்டை ஒன்றியம் மூக்கம்பட்டி அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்றம்.
புதுக்கோட்டை நகர் ஸ்ரீ அன்னை இளைஞர் நற்பணி மன்றம், மணமேல்குடி ஒன்றியம் வன்னிச்சப்பட்டிணம் ஸ்பார்டன்ஸ் இளைஞர் நற்பணி மன்றம், கந்தர்வகோட்டை ஒன்றியம் சிவந்தான்பட்டி டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகிய நற்பணிமன்றங்களைச் சார்ந்த இளையோர்,தங்களது கிராமங்களில் உள்ள இளையோர் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து முதியோர் கொடுஞ்செயல்கள் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்றனர்.
மேலும் இந்நிகழ்வுகளில் இளம் தலைமுறையினர் முதியோரிடம் அன்பு பாராட்டுவதோடு அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமெனவும் அவர்களின் தேவைகளை மனமுவந்து செய்து அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்வுகளை மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி. கோகுல பிரியா, நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர், திட்ட உதவி அலுவலர் ஆர்.நமச்சிவாயம் மற்றும் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.