Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

புதுக்கோட்டை அருகே சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர்களை தவிர்க்கும் விழிப்புணர்வு இயக்கம்

புதுக்கோட்டை

திருமயத்தில் சைல்டு லைன் சார்பில் நடந்த விழிப்புணர்வு கையெழுத்தியக்கம்

திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் தவிர்க்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான கையெழுத்து இயக்க விழிப்புணர்வு நடைபெற்றது. திருமயம் பேருந்து நிலையம் வளாகத்தில் ஆர்டிஓ சைல்டு லைன் இயக்குநர் குழந்தைவேல் மற்றும் திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் ஆகியோர்  தலைமையில் நடைபெற்றது.
  விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை  மற்றும் திருமயம் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியபாமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப்பணியாளர் சசிகலா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இதில், தன்னார்வலர்கள்,பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையா ளர்கள் குர்ஜாத்பானு, அன்பழகன், ஆரோக்கிய ராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரத்தினம், பனையபட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ், காவலர் கார்த்திக்,வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருண் ஆரோக்கிய மேரி.

திருமயம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், 1098 சைல்டு லைன் திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி, பொன்னமராவதி களப் பணியாளர் பூங்கொடி மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை  ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top