Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

ஓய்வூதியர்களின் சிரமங்களைக் குறைக்க வீடு தேடி வரும் வாழ்நாள் சான்றிதழ் சேவை: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

புதுக்கோட்டை

ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதல் நேர்காணல்

ஓய்வூதியர்களின் சிரமங்களைக் குறைக்க வீடு தேடி வரும் வாழ்நாள் சான்றிதழ் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளாக (2020 – 2021)  கொரோனா  பெருந் தொற்று காரணமாக ஓய்வூதியர் நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், அரசின் அறிவுறுத்தலின் படி 2022  -ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர் நேர்காணல்  1.7.2022 முதல் 30.9.2022 வரை காலை 10 மணிக்கு தொடங்கி 2  பிற்பகல் வரை நடைபெறவுள்ளது.

மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் – குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை ஓய்வூதியம் பெறும் மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்களினால் நடத்தப்படும் முகாம்களில் அரசு வேலை நாட்களில் காலை 10  மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை  நேரில் ஆஜராகி நேர்காணல் செய்து கொள்ளலாம்.

நேரில் வர இயலாதவர்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலங்கள் மூலம் நேர்காணல் செய்யப்படும். வாழ்வு சான்று மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள விரும்பும் ஓய்வுதியர்கள் (www.tn.gov.in/karuvoolam/)  என்ற இணைய தளத்திலிருந்து வாழ்வு சான்று படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றினை பெற்று சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்பி நேர்காணல் செய்து கொள்ளலாம்.

2022 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் கீழ்காணும்     4 முறைகளில் நடைபெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் வாழ்நாள் சான்று சமர்பித்தல்.  “ஜீவன் பிரமாண்” என்ற இணையதள சேவை (“Jeevan Praman Portal”)மூலம் மின்னணு வாழ்நாள் சான்று சமர்பித்தல். வீட்டு வாசலுக்கு வரும் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேவை மூலம் வாழ்நாள் சான்று சமர்பித்தல்   (Door Step Digital Life certificate through India Post Payment Bank). நேரில் வருகை. கருவூல முகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

ஓய்வூதியர்களின் வீண் அலைச்சலை தவிர்த்து இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் அளிக்கும் சேவையின் மூலம் வீட்டில் இருந்தபடியே ரூ.70 – சேவைக் கட்டணத்துடன் மின்னணு வாழ்நாள் சான்றினை பெறலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூல முகாம்கள் நடக்கும் இடங்களான,        கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி, மாட்சிமை தாங்கிய மாமன்னர் கல்லூரி திருமயம் ரோடு,   T.E.L.C பள்ளி, LIC எதிரில். சென்ட் மேரிஸ் பாய்ஸ் பள்ளிஇ உசிலங்குளம்        ஆகிய இடங்களில் 01-07-2022, 04-07-2022 லிருந்து  8-7-2022 வரை மற்றும்     11-07-2022  லிருந்து 15-07-2022 வரை நடைபெறுகிறது.

மேலும் 18-07-2022 லிருந்து 22-07-2022 வரை மற்றும் 25-07-2022  லிருந்து  29-07-2022 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருக்கோகரணம், அரசு முன்மாதிரி பள்ளி, சரவணா தியேட்டர் அருகில் நடைபெறுகிறது.

சார்நிலை கருவூலங்களில் நடைபெறும் இடங்களான, ஆலங்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி 01-07-2022, 04-07-2022, 21-07-2022 மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீரமங்கலம் 06-07-2022, 20-07-2022, 08-08-2022, 22-08-2022, அறந்தாங்கியில் T.E.L.C, பள்ளி அறந்தாங்கி 01-07-2022,  05-07-2022, 06-07-2022 மற்றும் BDO அலுவலகம் அறந்தாங்கி 13-08-2022, 14-08-2022, 15-08-2022, ஆவுடையார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆவுடையார்கோவில்      01-07-2022, 13-07-2022, 19-08-2022 மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி மீமிசல் 04-07-2022, 03-08-2022, கந்தர்வக்கோட்டையில் BDO அலுவலகம் கந்தர்வகோட்டை 01-07-2022,   04-07-2022, 05-07-2022 மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் கந்தர்வகோட்டை 01-08-2022, 02-08-2022, 03-08-2022 ஆகிய நாட்களில் நடைபெறும்.

மேலும் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  01-07-2022, 05-07-2022, 06-07-2022, 07-07-2022,  பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில்  01-07-2022,  07-07-2022, 08-07-2022, 12-08-2022, 13-08-2022, இலுப்பூர்  BDO அலுவலகத்தில்       01-07-2022, 05-07-2022, 06-07-2022,  திருமயத்தில் BDO அலுவலகம் அரிமங்களம்    01-07-2022, 05-07-2022, 06-07-2022, 01-08-2022, 02-08-2022, 03-08-2022 மற்றும் உதவி இயக்குநர் வேளாண்மை அலுவலகம் திருமயம் 07-07-2022, 08-07-2022, 11-07-2022,   12-07-2022, 04-08-2022, 05-08-2022, 08-08-2022, 10-08-2022, மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 01-07-2022, 04-07-2022, கறம்பக்குடி BDO அலுவலகத்தில் 01-07-2022, 05-07-2022 ஆகிய நாட்களில் சார்நிலை கருவூலங்களில் நடைபெறும்.

நேர்காணலுக்கான  ஆவணங்கள் ஓய்வூதி புத்தகம் (Pension Book), ஆதார்கார்டு (Aadhar Card), வங்கி கணக்கு புத்தகம் (Bank Pass book), செல்போன்  (For OTP) ஆகும்.

 ஓய்வூதியர்கள் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நேர்காணலுக்கு வரத்தவறினாலோ, சான்றொப்பம் பெறப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்பத் தவறினாலோ அல்லது “Jeevan Praman Portal” மூலம் பதிவு         செய்ய தவறினாலோ ஒய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் நவம்பர் 2022 முதல் நிறுத்தப்படும் எனவும்  மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top