Close
நவம்பர் 22, 2024 3:50 மணி

சேவா பாலம் தொண்டு நிறுவன வெள்ளி விழா: நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை

சென்னையில் டிவிஎன் சேவா பாலம் சார்பில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் கலந்துகொண்டு ஏழை மற்றும் நலிந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

சென்னை திருவொற்றியூர் சேர்ந்த டிவிஎம் சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின் 25 -ஆவது ஆண்டு வெள்ளி விழாவினை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் கலந்துகொண்டு ஏழை மற்றும் நலிந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
டிவிஎம் சேவா பாலம் தொண்டு நிறுவனம் திருவொற்றியூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது . இதன் சேவையை பாராட்டி தமிழக அரசு சிறந்த சமூக சேவகருக்கான முதலமைச்சர் விருது வழங்கியுள்ளது.
டிவிஎம். சேவா பாலம் நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாலம் நிறுவனத் தலைவர் மா.இருளப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொழிலதிபர்  ஜி.வரதராஜன் தலைமை தாங்கினார். சென்னை பசுமை இயக்கத் தலைவர் என்.துரைராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு சேவா பாலம் நிறுவனத்தின் 25 ஆண்டுகால சமூக சேவையை பாராட்டி நிறுவனத்தின் அமைப்பாளர் மா. இருளப்பன் மற்றும் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை   வழங்கினார்.
அப்போது  தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்கள்,  ஊனமுற்றோருக்கான சைக்கிள்கள்,  பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கங்கள் உள்ளிட்டவைகளை நீதிபதி அனிதா வழங்கினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தொழிலதிபர்கள், சமூக சேவர்கள் உள்ளிட்ட இருபத்தி மூன்று பேருக்கு சிறப்பு விருதுகளை நீதிபதி அனிதா வழங்கினார். குறிப்பாக திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் திடீரென இடிந்து விழுந்த போது எவ்வித உயிரிழப்பும் இன்றி இங்கு வசித்தவர்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு வுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை நீதிபதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை இணை ஆணையர் சங்கர் கணேஷ் துணை ஆணையர் கே சரவணன் திரைப்பட நடிகர் ரமேஷ் கண்ணா, டாக்டர் ஜெயக்குமார், பாலம் நிர்வாகிகள் பெஞ்சமின், மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top