நாட்டின் முதல் பெண் மருத்துவர் பத்மபூஷண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 137-ஆவது பிறந்த நாள் (ஜூலை 30. 2022 சனிக்கிழமை) விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுமென ஆதீனம் தகவல் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக புதுக்கோட்டை திலவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் வெளியிட்ட தகவல்: நாட்டின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 137-வது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்படும் தையல் இயந்திரம் பெற தகுதியுடைய ஏழை விதவை பெண்கள் விண்ணப்பிக்கலாம்
டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பிறந்த தாளான நடைபெற உள்ள விழாவில் தேர்வு செய்யப்பட்ட விதவை பெண்களுக்கு புகழ்மிக்க சான்றோர் திருக்கரங்களால் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் .
விண்ணப்பிப்போர், விதவைச் சான்றிதழ், தையல் பயிற்சி பெற்று சான்றிதழ், முகவரி சான்றாக ஆதார் அட்டை, கைப்பேசி எண் உள்ளிட்ட ஆதார நகல்களோடு ஏ4-தாளில் மனுவாக எழுதி, திலகவதியார் திருவருள் ஆதீனம், 1120/ 5. தஞ்சைச் சாலை, மச்சுவாடி, புதுக்கோட்டை- 622 001. என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ வருகின்ற 2022 ஜூலை 25 -ஆம் தேதி திங்கட்கிழமை மாலைக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பலாம். தேர்வு செய்யப்பட்டோருக்கு தகவல் அனுப்பப்படும். விழா நடைபெறும் நாளில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.