Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா  

புதுக்கோட்டை

புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்க விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா                                                                                                                                                                                                                                     புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா  தாஜ்   கூட்ட அரங்கில்   நடந்தது. விழாவுக்கு செஞ்சுரி லயன்ஸ் தலைவர் தெட்சணாமூர்த்தி தலைமை வகித்தார்.  லயன்ஸ் சங்க உறுப்பினர் வளர்ச்சி குழு தலைவர் ஜெ . கண்ணன் வரவேற்று பேசினார்.
  லயன்ஸ் சங்க செயலாளர்   பக்தவச்சலம் ஆண்டறிக்கை  வாசித்தார். மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆர் .ஆர்  .கண்ணன்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  2022- 2023 ம் ஆண்டின்  புதிய தலைவர்  ஏ . அரவிந்த்,    செயலாளர்  டேவிட்ராஜ்,  பொருளாளர் ஆர்.மூர்த்தி  மற்றும் நிர்வாகிகள் பாலாஜி ,சின்னக்கண்ணு,  திருநாவுக்கரசு, ரவிச்சந்திரன் தனபாலன், கண்ணன், குத்புதீன், அன்புசண்முகம், கிருஷ்ணசாமி, முரளி  தேசிங்குராஜன்,   புவனேஸ்வரி தங்கமாளிகை நடராஜன், குமார், வைரவன் உள்ளிட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
பின்னர் சங்கத்தில்  புதிய உறுப்பினர்கள்  8 பேர்களுக்கு முன்னாள் ஆளுநர் ஆர்.சுவாமிநாதன், லயன்ஸ் சங்க பின் அணிவித்து வாழ்த்தினார்.
பொறுப்பேற்றுக்கொண்ட புதிய தலைவர்  ஏ . அரவிந்த்,  ஏழைகள மற்றும்  ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 14 வயது பள்ளி மாணவி,  தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரண உதவிகளும் மாற்று திறனாளிக்கு தையல் மிஷின்  ஆகிய நலத்திட்டங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை
பின்னர் சங்கத்தின் ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் அவர் பேசுகையில், கண்ணொளித்திட்டம் ,  பசுமை  திட்டங்கள்,  ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகள், ஏழை மாணவர்களின்  கல்வி உதவி உள்ளிட்டதிட்டங்களை வரும்  ஆண்டில் செயல் படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
கூட்டத்தில்  செஞ்சுரி லயன்ஸ்  சாசன தலைவரும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான     டாக்டர் வை. .முத்துராஜா, லயன்ஸ் சங்கத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள்   புவனேஸ்வரி தங்கமாளிகை நடராஜன், வாக்கர்ஸ்கிளப்  நிர்வாகிகள்  விளையாட்டுதுறை  அலுவலர் குமரன் மற்றும் மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள்   கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள்   மரம் அறக்கட்டளை,   மரம் நண்பர்கள்   உட்பட பலர்  கலந்து கொண்டு  புதிய நிர்வாகிகனை வாழ்த்தினர்.  நிறைவாக  செஞ்சுரி லயன்ஸ்     செயலாளர்  டேவிட்ராஜ்   நன்றி கூறினார்  .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top