Close
நவம்பர் 22, 2024 4:59 மணி

புதுகை அரசு ஐடிஐ -ல் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை

புதுகை அரசு ஐடிஐ-ல் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் நடைபெற்ற போதை எதிர்ப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சி

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் புதுக்கோட்டை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து நடத்தும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்  எஸ்.ராமர் தலைமையில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.ஜோதிமணி வரவேற்றார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவரும், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு உறுப்பினருமான மாருதி கண.மோகன்ராஜா, துணைத் தலைவர் ஏஎம்எஸ். இப்ராஹிம்பாபு.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆர். சிவக்குமார், நகர் மன்ற உறுப்பினர் ஜெ.ராஜா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க பொருளாளர் சி.பிரசாத், இணைச்செயலாளர் ஏ.ஆர்..முகமதுஅப்துல்லா, நகர் மன்ற உறுப்பினர் கனகஅம்மன்பாபு, பொதுக்குழு உறுப்பினர் விஆர்எம். தங்க ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு  சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர் கள்,தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகயோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் நிலைய பயிற்சி அலுவலர்கள் மாதவன். மனோகரன். கிருஷ்ணன். மற்றும் பயிற்றுநர்கள் ராஜேந்திரன் ரமேஷ் ஐயப்பன் யோக சந்திரன் சத்யநாராயணன் காத்தலிங்கம் நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் ஆர். ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top