Close
செப்டம்பர் 20, 2024 1:21 காலை

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து விரைவில் போராட்டம்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழுக்கூட்டம்

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து  விரைவில் (டிசம்பர்) போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோட்டில்  நடைபெற்ற தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக்கூட்டத்தில்  மாநிலத்தலைவர் மோகன் சங்கர் மற்றும் தலைவர் எம் வெங்கடேஷ்  ஆகியோர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

சில தயாரிப்பு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு குறைந்த விலையிலும் பாரம்பரிய விநியோகஸ்தர்களுக்கு அதிக விலையிலும் பொருட்களை வழங்குகின்றன இது தொடரும் எனில் வரும் டிசம்பரில் கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்போ அல்லது பின்போ சில்லறை வணிகர்களுடன் இணைந்து மாநில அளவில் அந் நிறுவனங்கள் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளளை நீக்க வேண்டும். வணிகர் நல வாரியத்தால் வழங்கப்படும். உதவித் தொகையை அதிகப்படுத்த வேண்டும். ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்த மத்திய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும். சேதமடைந்த மற்றும் காலாவதியான பொருட்களை திரும்ப பெறாத நிறுவனங்களை புறக்கணிப்போம்.

விநியோகஸ்தர்களின் செலவினங்கள் மிக அதிக அளவில் உள்ளது. எனவே லாப விகிதத்தை வினியோகஸ்தர்களுக்கு அதிகரிக்க வேண்டும். சேல்ஸ்மேன் சம்பளம் வாகனச் செலவு போன்றவைகளை தயாரிப்பு நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும். டாபர் நிறுவனம் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் விரோத போக்கை கடைபிடித்தால் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.

மேரிகோ நிறுவனம் பெரிய கடைகள் மற்றும்சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் நேரடியாக சப்ளை செய்யும் திட்டத்தை அமல்படுத்தினால் அந்த நிறுவன தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்போம் எனவும்  கூறினர். இதில்,  மாநில கௌரவ ஆலோசகர்கள் ஜெகதீசன் காதர் முகைதீன் துணைத் தலைவர் எஸ் ஞானவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top