Close
மே 22, 2025 9:59 காலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் மரக்கன்று நடவு

தஞ்சாவூர்

தஞ்சை வல்லத்தில் மரக்கன்று நடவு செய்யும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் , மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம்  ஓராண்டில் ஒருலட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (29.7.2022) தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில்  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ்  மரக்கன்றுகள் நடும் பணி  மேற்கொள்ளப்பட்டது. இதனால் கல்லூரி மற்றும் பொது இடங்களில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் நல்லமுறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளுக்கும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என ஆட்சியர்  தெரிவித்தார்.

முன்னதாகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மூலம் 10 உறுப்பினர் அடையாள அட்டை, மகளிர் திட்டம் சார்பில் ஈஸ்வரி மகளிர் சுய உதவிக் குழு ரூ. 4 லட்சம்  கூட்டுறவு வங்கிக் கடன் காசோலையையும் , மாவட்டஆட்சியர் வழங்கினார்.
இதில், வல்லம் பேரூராட்சிதலைவர்  செல்வராணி கல்யாணசுந்தரம், ஒன்றிய குழு துணைபெருந்தலைவர்  அருளானந்தசாமி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகாமைக்கேல், பேரூராட்சிஉறுப்பினர்கள்  ஆரோக்கியசாமி,  அன்பழகன், .ரேவதி, துணைத்தலைவர் மகாலட்சுமிவெங்கடேசன் ,உதவி இயக்குனர் பேரூராட்சிகள்  கனகராஜ், வல்லம் பேரூராட்சி செயல்அலுவலர்  பிரகந்தநாயகி, இன்டாக் கௌரவ செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top