Close
செப்டம்பர் 19, 2024 7:18 மணி

மலைவாழ் மக்கள் ஆற்றை கடந்து செல்ல ரூ 6 லட்சம் மதிப்பில் விசைப்படகை வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…

ஈரோடு

சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரகடா என்னும் மலை கிராமத்தினர் ஆற்றைக்கடந்து செல்லும் வகையில் விசைப்படகை சொந்தச்செலவில் வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தெங்குமரகடா வனப்பகுதியில் உள்ள  கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள்  மாயாற்றை கடந்து செல்ல ரூ. 6 லட் சம் மதிப்பிலான விசைப்படகை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த செலவில் வழங்கினார். அவருக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரகடா என்னும் மலை கிராமம் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்துடன் இணைந்துள்ள இந்த கிராமத்தில் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கல்வி, விவசாயம், மருத்துவம்  உள்ளிட்ட தேவைகளுக்காக பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல ஊருக்கு அருகே உள்ள ஆபத்தான மாயாற்றை கடந்து தான் செல்வ வேண்டும். இந்த காட்டாற்றை கடந்து செல்ல பாலம் ஏதும் அமைக்கப் படாத காரணத்தால் பரிசல் மூலமாக மாயாற்றை கடந்து சென்ற பிறகே அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்வது வழக்கமாகஇருந்து வருகிறது.

இந்நிலையில் பவானி சாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரியின் வேண்டுகோளை ஏற்று இப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறியகடந்த மாதம் இந்த பகுதிக்கு வந்திருந்த ஈரோடு புறநகர் மேற்கு  அதிமுக  செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையனிடம் தெங்குமரடா மலைவாழ் மக்கள் ஆபத்தான மாயாற்றை கடந்து தங்களுக்கு சிறு பாலம் கிராம ஒன்றை அமைத்து வேண்டுமென தர கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஆற்றில் வெள்ளம் அதிகமாக செல்லும் போது ஆபத்தின்றி பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான விசை படகு ஒன்றை தனது சொந்த செலவில்  கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பண்ணாரி எம். எல்.ஏ, முன்னாள் எம்.பி. கே.கே.காளியப்பன், ஒன்றிய கழக செயலாளர்கள் தம்பி(எ) கே.ஏ.சுப்பிரமணியம், , கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர், மன்ற அருள் ராமச்சந்திரன். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.என் முத்துரமணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top