Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

காவிரியில் வெள்ளப்பெருக்கு… ஈரோடு மாவட்டத்தில் குடியிருப்புகள் பாதிப்பு

ஈரோடு

ஈரோடு காவிரியாற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி காவிரி ஆற்றில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக  நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, பவானி பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

பவானியில் உள்ள காவிரி வீதி, கந்தன் தெரு, செம்படவர் வீதி, பழைய பஸ் நிலையம், காமராஜர் நகர், ஆகிய பகுதிகளில் 100 வீடுகளுக்கும் மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் இருக்கும் பொருட்களான கேஸ் சிலிண்டர், பிரிட்ஜ் மற்றும் உபயோகப் பொருட்களை பரிசல்கள் மூலம் மீட்டு வருகின்றனர்.

இதில் 500-க்கும் மேற்பட்டோர் கந்தன் பட்டறை, காமராஜர் நடுநிலைப்பள்ளி, 24 மனை தெலுங்கு செட்டியார் மண்டபம், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

ஈரோடு
கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மின் வயர்கள் செல்லும் இணைப்புகளை அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பவானி பழைய பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தபட்டது. காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பவானி ,கருங்கல்பாளையம் கடல் போல காட்சியளிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top